27/06/2026
🇮🇳💔 முகத்தில் கு*ண்டு பாய்ந்தும்... போர்க்களத்தை விட்டு பின்வாங்காத தமிழன்! 💔🇮🇳
ஒரு சாதாரண மனிதனாக இருந்திருந்தால் அந்த நொடியே சரிந்து விழுந்திருப்பார்...
முகத்தில் குண்டு பாய்ந்தது...
தோள்பட்டையில் பலத்த காயம்...
உடல் முழுவதும் வலி...
உயிர் பிழைப்பாரா என்பதே கேள்விக்குறி...
ஆனால் இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அப்படி இல்லை!
2024 டிசம்பர் 19 அன்று தெற்கு காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அவர் தனது படைப்பிரிவுடன் களமிறங்கினார். கடுமையான து*ப்பாக்கிச் சண்டையின் போது அவரது முகத்திலும் வலது தோளிலும் கு"ண்டு பாய்ந்தது.
அந்தக் கா*யம் எந்த மனிதரையும் செயலிழக்கச் செய்யும் அளவிற்கு கொடூரமானது. ஆனால் அவர் தனது உயிரைப் பற்றி சிந்திக்கவில்லை. தன் சக வீரர்களின் பாதுகாப்பையும் நாட்டின் பாதுகாப்பையும் மட்டுமே நினைத்தார்.
ர*த்தம் வழிந்துகொண்டே இருந்தது...
வலி தாங்க முடியாத அளவில் இருந்தது...
ஆனால் அவர் பின்வாங்கவில்லை...
மாறாக, நேருக்கு நேர் மோதலில் ஒரு கொடூர தீ*விரவாதியை வீழ்த்தி தனது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினார். அவரது துணிச்சலும் தியாகமும் அந்த நடவடிக்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த அசாதாரண வீரத்திற்காக இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான "கீர்த்தி சக்ரா" விருது அவருக்கு வழங்கப்பட்டது.
2026 ஜூன் 8 அன்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் ராஷ்டிரபதி பவனில் இந்த விருதை வழங்கி கௌரவித்தார்.
வீரம் என்பது பயமின்மை அல்ல...
பயம் இருந்தாலும் கடமையை நிறைவேற்றும் மன உறுதியே உண்மையான வீரம் என்பதை மீனாட்சி சுந்தரம் தனது செயலால் நிரூபித்துள்ளார்.
முகத்தில் குண்டு பாய்ந்தும் நிமிர்ந்து நின்ற அந்த இரும்பு மனிதருக்கு நமது வீர வணக்கங்கள்! 🙏🇮🇳
✍️.
🇮🇳🙏