SNR Jewellery Madurai

SNR Jewellery Madurai AN EXCLUSIVE SILVER SHOP

தந்தை சொல்மிக்க மந்திர மில்லைதனயன் யான் படித்த தமிழாலே தந்தைக்கோர் புகழாஞ்சலி.1.பாண்டுகுடி மண்ணின் மைந்தன் அவன்அகவை பதின...
28/07/2020

தந்தை சொல்மிக்க மந்திர மில்லை
தனயன் யான் படித்த தமிழாலே தந்தைக்கோர் புகழாஞ்சலி.

1.
பாண்டுகுடி மண்ணின் மைந்தன் அவன்
அகவை பதினாறில் ஆறுவிரல் பாதமுடையோன்
தந்தை இழந்த தனயன் அவன்
வெறுங்காலில் வேக நடை எடுத்தான்.
2.
ஒருநாளும் சோர்வறியான் ஓடும் நடையுடையான்
இல்லம் செழிக்க தம்குலம் செழிக்க
தமக்கையர் மணமுடிக்க தன் கையே தனக்குதவியென
குடிகொண்ட பாண்டுகுடி விட்டு அவன்
3.
பாண்டிமீனாள் குடிகொண்ட தென்கூடல் குடிபுகுந்தார்
வளம்சேர்க்க கனவு கண்டார் விடாமுயற்சியில்
வெள்ளியம்பல வாசலில் வெள்ளியின் விருட்சம்கண்டார்
நேர்மையுடையார் நேர்த்தியுடன் தனம் சேர்த்தார்.
4.
தனவணிகம் தனில் தென்தமிழகம் செழிக்கச்செய்தார்
முத்தான மொத்த வணிகம்தனில் கரைகண்டார்
உற்றார் உறவினர் வளம்பெற செய்தார்
தலைமுறையும் பல்குடும்பம் செழிக்க செய்தார்.
5.
தம்குலம் காக்கும் தெய்வம் ஓட்டுவீட்டுடையாள்
மானாமதுரை அருள் அங்காளம்மன் அவள்
கருங்கல் கோவில் தானெழுப்பி நால்மதிச்
சுவர் தானெழுப்பி திருக்குளமும் தான்செய்வித்தார்.

6.
சுற்றம் போற்றி சுடரொளி ஏற்றி
தம்குலம் காத்தாளுக்கு குடமுழுக்கு மூன்றும்செய்வித்தார்
மதிவெள்ளி மாலையில் இன்குரலில் அவளிசைபாடி
திருவிளக்கு பூஜை வைத்தார் போற்றி.
7.
பாவம் நீக்கும் சிவராத்திரி விழாஎடுத்து
மும்மாரி பொழிய மாசியில் பாரித்திருஉலா வைத்து
ஆடியில் தெப்போற்சவமும் செய்வித்தார் இனி
எம்குலம் காப்பார் போற்றி போற்றி.
8.
செட்டி மக்கள் தலைமை ஏற்றார்
செயலில் வீரம் கண்டார் அவர்
ஆள்பவனுக்கு அறம் கூற்று என்பார்
கொண்ட கொள்கையில் நின்றுவென்று காண்பார்.
9.
வைகை வடகரையில் செட்டி தெய்வம்
பெட்டியிலே வீற்றிருந்தாள் உள்ளக் கோவிலிலுள்ளவளை
மண்டபமும் தான்கட்டி முத்தாலம்மனாய் இருக்கச்செய்தார்
போதாதென அவள் எண்ணினாளோ என
10.
தென்கரையில் பேர்சொல்ல அம்மன் அவளுக்கு
கருங்கல்லில் திருக்கோவில் செய்வித்தார் போற்றி
குலம் செழிக்க குலதெய்வம் அவளுக்கு
குடமுழுக்கும் செய்வித்தார் போற்றி.

11.
முத்தமிழ் சங்கம் கண்ட மாமதுரையில்
முத்தாலம்மன் பாத மண்டபத்தில்
தமிழ்வழிக் கல்விக் கூடம் கண்டார்
தாம் போற்றிய திருமலைவாசன் பெயராலே
தம்சொத்தில் முன்னூறு மழலையர் படிக்கச்செய்தார்.
12.
சமூகம் செழிக்க கல்வியே துணைஎன்பார்
ஊர்திரட்டி பொறியியல் கல்லூரி கண்டார்
முயற்சி திருவினை ஆனது அவர்
தம்கண்ணால் தம்மக்கள் வளம் கொழிக்க கண்டார்
13.
பிறந்த மண்ணின் மக்கள் மனமறிந்தார்
முன்னோரும் இன்னோரும் கண்ணனே கதிநின்றார்
பரந்தாமன் பிறந்துலாவிய வடமதுரை தனில்
தம்மக்கள் தம்மோடு மதுராகிரி வலம்வரச் செய்தார்.
14.
தாமோதரனை தம்மோடு அழைத்து வந்தார்
வரும்வழியில் பூரி ஜெகநாதன் கண்டார்
உருவமாய் ஆக்கினார் பாண்டுகுடியில் லட்சுமிநாராயணராய்
உலாவரச் செய்தார் தெப்பத்தில் அவன்புகழ் பாடியே.
15.
உத்தவர் வேண்டி நின்றார் வைகுண்டம்
இத்தலம் இருஎன்றான் உத்தமன் நந்தகோபன்
எத்தவம் பெறவேண்டும் நரநாராயணனை காண
அத்தலம் சங்கரர் அமைத்த வடபத்ரிகாசிரமம்.

16.
கடுங்குளிரும் வாட்டும் என்றும் இமயமலைச்சாரல்
பனிக்கட்டி இருக்கும் அன்றோ அலகாநந்தன்நதிச்சாரல்
வைணவம் போற்றும் திவ்ய தேசம்
அத்தேசம் காண அடியார் கூட்டம்
17.
பலகஷ்டம் படுவாரென நாராயணன் மனதில்எண்ணி
சோலைமா மலையடிவாரம் அழகர்தேசம் தன்னில்
அமைத்தாரே அழகு தென் பத்ரிகாசிரம்ம்
போற்றி போற்றி.
18.
கட்டிய கோவில்தனில் இராமனும் குடிபுகுந்தான்
சீதையும் உடன்வந்தாள் இலக்குவன் துணைநின்றான்
அனுமனும் அவரடிபணிந்தான் இலக்குமி வளம்சேர்த்தாள்
இத்தலம் போற்றும்புகழ் குருமார் சூழ
19.
அமைத்தாரே அடிகளாரின் அடிகள் எம்தந்தை
ஆடிச்சித்திரையில் அழகன் திருக்கண்காண
அலை அலையாய் மக்கள்கடல் கூட
ஆரவாரமாய் வருவானே எம்பெருமான் அழகனவன்.
20.
கோதைநாச்சியார் ரெங்கமன்னார் மணக்கோலம் காண
கொண்டாடும் ஊர்உற்றார்சூழ வைபவமும் செய்வித்தார்
அன்னமிட்டு அவர்பாடி ஆடி மகிழ்ந்து
அரங்கனின் அகமகிழ்ந்து அவனந்தரங்கம் சேர்ந்துவிட்டார்

21.
தாம்பிறந்த பாண்டுகுடி உலகறிய வேண்டுமென
கல்வியாலே அத்தலம் பதிக்க கண்டார்
உருவாக்கினார் ஊர்கூடி கல்வித் திருக்கோவில்
அழகன்மலை வாசம் அவனோ இவனுள்ளே வாசம்.
22.
ஆலைகட்டும் செட்டிமார்போல தம்சொத்தில் பலகோடி
அள்ளிக் கொடுத்து கட்டிமுடித்தார் கல்விக்கூடம்
அவரடி நடந்தமண் சொல்லும் அவருழைப்பை
அடிஅடியாய் உள்ள செங்கற்கூட்டமும் சொல்லும்.
23.
ஆயிரம் மழலையர் படிக்கச் செய்தார்
அவரும் நூறுசதம் தேர்ச்சி தந்தார்
எத்தனை போராட்ட உழைப்பை தந்தார்
அத்தனையும் ஊர்பேர் தழைக்கச் செய்தார்
24.
சத்தியமே சோர்ந்திருக்கும் சகலநாளும் சங்கடங்கண்டு
தளர்வறியா தலைவனவர் வென்று காண்பார்
கடைசிவரை இரும்பு மனிதனாய் நாம் பட்டேலை
கேட்டதுண்டு கண்டுள்ளேன் அவருள்ள வரை
25.
தூற்றுவார் தூற்றலும் போற்றுவார் போற்றலும்
போகட்டும் கண்ணன் என்பார் அவர்
கூர்கொண்ட பார்வையாலே நேர்கொண்ட நடையாலே
பேர்சோல்லும் பிள்ளையாய் கொண்டகொள்கையில் வெற்றிகண்டார்

26.
கொண்ட கடமை முடிந்தது என
வந்த வேலையும் முடிந்தது என
அவன்நாமம் பாடியே சென்றுவிட்டார்பரந்தாமனிடம்
எம்மனக் குறை நீக்க இனிஎவருள்ளார்?
27.
இமயத்தின் இமயமவன் சத்தியத்தின் தலைமகன்
கோடியில் ஒருவனவன் மக்கட்மனம்வென்ற மன்னவனவன்
ஊர்போற்ற மாதிரியாய் வாழ்ந்தும் விட்டார்
உலகறிய செய்து விட்டார் பாண்டுகுடி.

28.
காலத்தை வென்றமகன் அவருக்கோர் பிறவியில்லை
எத்தனை பிறவி எனக்கிருந்தாலும் அத்தனையிலும்
அவருக்கு மகனாக நல்முத்தாய் நான் பிறக்கவேண்டும்
நாராயணர் உம் திருவடி தொழுதேன்
புகழ் ஓங்கிய நாராயணர் போற்றி.

போற்றும் மகன்,
SN முத்துகிருஷ்ணன்.
SNR ஜுவல்லரி. மதுரை.
9443162074

18/02/2014

Create extraordinary videos of your life or business. The easiest way to make beautiful videos online. Try it for free!

www.snrjewellery.com we have launched new website to showcase our exclusive silver items available in our silver shop - ...
01/02/2014

www.snrjewellery.com
we have launched new website to showcase our exclusive silver items available in our silver shop - SNR JEWELLERY.
FEEL THE DIFFERENCE

Address

Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when SNR Jewellery Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share