16/07/2024
நவரத்தினங்களில் ஒன்றான முத்து அணிவதால் ஏற்படும் நன்மைகள்:
1. தரமான, கனமான, சந்திரபிம்பம் போன்று வெண்மையாக உள்ள முத்துகளை அணிந்தால் எல்லாவிதமான பாவங்களும் போகும். ஆயுள் அதிகமாகும்.
2. மஞ்சள் நிறமுடைய முத்துக்கள் செல்வத்தையும், சிவப்பு நிறம் உடையவை அறிவையும், வெண்மை நிறம் உடையவை புகழையும், நீல நிறமுடையவை சகல பாக்கியங்களையும் கொடுக்கும் என்று ஸ்மிருதி ஸாரோத்தரம் என்ற நூல் கூறுகிறது.
3. தரமான முத்துக்களை அணிபவர்களது வீட்டில் கால்நடைகள் விருத்தியாகும்.
4. சிறந்த மனோநலமும், மனோதிடமும் உண்டாகும்.
5. எக்காரியத்திலும் உணர்ச்சிவசப்படாத சமநிலையைக் கொடுக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும்.
6. எப்போதும் மனத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தும்.
7. அணிபவர்களின் தோட்டம், நீர்வசதிகள் ஆகியவை விருத்தியாகும்.
8. இவர்களுக்கு விதவிதமான ஆடைகளும் ஆபரணங்களும் படிப்படியாக வந்து சேரும்.
9. இவர்களுக்கு கலைகளில் ஆர்வமும், பண்டித்துவமும் (Expert) கிடைக்கும்.